இருட்டின் விழிகள்

கவிஞர்  புதுவைத் தமிழ்நெஞ்சன்

உன் வாழ்க்கையில்
இரவும்
பகலும்
உன்னிடம்
தான் இருக்கிறது 

இமைக்கதவை மூடினால்
இருள்
உறக்கத்
தாழ்ப்பாளை திறந்தால்
பகல்
 

பகலில் வளரும் நிழல்கள்
இரவில்
காணாமல்
போய் விடுகிறது 

இருட்டில் இருப்பவன்தான்
வெளிச்சத்தில்
இருப்பவனை
காண்கிறான்
 

வெளிச்சத்தில் இருப்பவனால்
பார்க்க
முடிவதில்லை 

அப்படியெனில்....
இருட்டு
வேண்டுமா?
வெளிச்சமா
? 

பகலின் நிழல்தான்
இருட்டு
இருட்டின்
விழிகள் தான்
பகல்
 

இருட்டுதான் இயற்கை
மற்றதெல்லாம்
செயற்கை 

பகலில் காணமுடியாத
வான்மதி
,விண்மீன்களை
இரவில்
தான் காண்கிறோம் 

உறக்கமின்றி
உயிர்கள்
வாழமுடியாது 

இரவுகள் இன்றி
இயற்கை
வாழமுடியாது 

இருட்டு
விதை
உறக்கம் 

பகல்
விதை
விழிப்பு

 
 
 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்