வெப்பச்சலனம்
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம்
தண்ணீர்
பாய்ந்த
வாய்க்காலில்
மிச்சமிருந்த
ஈரப்பதத்தில்
ஊர்ந்துகொண்டிருந்தன
எறும்புகள்
புற்களை
மேயும்
பசுக்களும்
வேட்கையால்
தலையைத்தூக்கி
அவ்வப்போது
வானத்தைப்
பார்த்தன
வறண்ட
கிணறுகளில்
தழைத்திருந்த
மரங்கள்
திராணியற்று
சருகாகி
தலைசாய்த்தன
வானிலை
அறிக்கை
மட்டும்
மேகமூட்டங்களுக்கு
வரவேற்பு
கொடுத்துக்
கொண்டிருந்தன
சுள்ளிகள்
பொறுக்கிக்
கொண்டிருந்த
ஏழைச்
சிறுமிக்கு
அடிவயிறு
நோக
வீட்டுக்கு
ஓடினாள்....
புரியாத
புதிருக்குள்
உதிரம்
பெரியவளான
செய்தி
சொன்னது
வாட்டும்
வெய்யிலிலும்
இயற்கை
வாடிக்கையாகி
ஏழைகளை
சோதிக்கும்
எல்லைகளை
எப்போதும்
சுருக்கிக்கொள்வதில்லை !!
மகிழும்
தருணத்தில்
தாயின்
வறுமைக்கோடுகள்
வீடெங்கும்
குறுக்கும்
நெடுக்குமாய்
சிறைபடுத்தி
மகிழ்ந்தன ....!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|