நான் கொரோனா பேசுகிறேன்....

கவிஞர்  மஞ்சு நரேன்



 

ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் ..
நான்
கிருமி அல்ல ...
கடவுளின்
  தூதுவன் .   

ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ...  

ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன்  தானே  நீ  

ஆயிரமாயிரம்  மரங்களை  
அழித்து
நாற்காலியில் அமர்ந்து தேனீர்  பருகியவன் தானே நீ  

ஆயிரமாயிரம்  பறவைகளை  அழித்து
தொலைபேசியில்
  உரையாடியவன்  தானே  நீ  

இப்போது புரிகிறதா  வலி  என்றால் என்ன  என்று ... 

பணத்துக்கு ஒரு நீதி.. 
வீதிக்கு ஒரு ஜாதி. 
பெயருக்கு ஒரு வாழ்க்கை .
என வாழ்ந்தவன் தானே  நீ  

இப்போது
என்னை கண்டு பயந்து  முடங்கி  ஒளிகிறாய் ..    

வானத்தை  போல் பரந்த  மனம்  கொண்டாயா ....
நிலத்தை போல் சமமாக  பிறரை  நினைத்தாயா ....
நீர் போல் தன்னலமின்றி தாகம்  தீர்த்தாயா . 
காற்றை போல் அனைத்தையும்  அரவணைத்தாயா ....
நெருப்பை போல் தீயதை பொசுக்க துணிந்தாயா ..   

பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?
காற்றை மாசுபடுத்தவா ?
இயற்கையாய் அழிக்கவா ?
பூமியை கழிப்பிடமாக்கவா ? 

ஒன்றை மட்டும் புரிந்துகொள் ..
உலகம் உனக்காக மட்டும் சுழலும் பாம்பரம் அல்ல . 

இந்த உண்மையை உணர்ந்தால்..
கடவுளையே கண்டுபிடித்த உனக்கு
எனக்கான மருந்தினை கண்டுபிடிப்பது  சிரமம் அல்ல .... 

அச்சம் கொள்ளாதே. 
நானே வெளியேறுவேன்
பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக  ...
உலகம நிறைந்த பிஞ்சு குழந்தைகளுக்காக ..   

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்