மாற்றமே மருந்து
கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு
வர்ணாசிரம
பேதம்
காட்டி
வஞ்சனையாய்ப்
பஞ்சமரென்று
தர்மத்தின்
நெறியெனச்
சொல்லி
தாழ்மைப்படுத்தி
வைத்து,
ஆதிக்க
வெறி
பிடித்தோர்
ஆட்டிப்
படைத்துயர்ந்தார்! -
சமூக
நீதியை
எடுத்துரைக்க
நிலைமைகள்
மாறிற்றின்று!
தீண்டாமை
திணித்தோரின்று
தீண்டாமைத்
தீயில்
நொந்தார்!
தாழ்வென்று
சொன்ன
வேலை;
தான்செயப்
பழகிக்
கொண்டார்!
ஆண்டவர்க்குச்
செய்யும்
சேவை
அருகதை
அற்றுப்
போனார்! -
எங்கும்
தாண்டவமாடும்
தொற்றால்
சமூக
விலக்கம்
கண்டார்!
கவசங்கள்
அணிவோர்
கூட
கரோணா
பாதக
முற்றார்!
அவரவர்
துப்புரவென்னும்
அவசியத்
தூய்மை
கற்றார்!
ஒருவரையொருவர்
சார்ந்து
உய்வதே
வாழ்வென்றுணர்ந்தார்!
மருந்திலாத்
தொற்றால்
பெற்ற -
பெரும்
மாற்றமே
மருந்தாய்க்
கொள்வார்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|