காவல்காரனாய் நிலா !!

பிரியமுடன் பிரபு




பொங்கலுக்கு முந்தைய இரவு
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
விடிய விடிய

நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!

பத்தடி அகலத்தெரு முழுவதும்
பரந்து விரிந்ததுன் கோலம்

புள்ளிகளெல்லாம் தேவதைகளாகிக்
கோடுகளை வளைத்து எடுத்து
இடுப்பில் மாட்டி ஆட்டம் போட்டன
வீட்டுச் சாளரத்தின் வழியே
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
வெகுநேரமாகியும்

'நல்ல வேளை யாரும் பார்கல'-என்று
நான் எண்ணிய நேரம்
நிலா என்னை கவனிப்பதை உணர்ந்தேன்
சிரித்த படியே உறங்கச் சென்றேன்

யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!.





priyamudan_prabu@yahoo.com.sg