கு.மா.பாவின் நூற்றாண்டு விழாவினையும் காணலாமே

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்



                        

 
சீர்மிகுந்த திருவாவூர் மாவட்டக் குறிச்சிதன்னில்
           சாதனைகள் படைப்பதற்காய் கு.மாபா தோன்றினார்;
ஏர்பிடிக்கும் குடும்பத்தின் ஏகமகன் இவறன்றோ
           இல்லாளான் இறந்ததினால் ஈன்றவரி டம்வளர்ந்தார்
ஊறறிந்த விவசாயி உழைப்பாளி தாயிடமே
           ஊக்கமாய்தே வாரதிரு வாசகமும் படித்தாரே
பார்புகழும் பேரறிஞர் அண்ணாவி டம்அவரும்
           படித்தெழுதல் தொழில்தன்னை பக்குவமாய் புரிந்துவந்தார்;

அண்ணாவின் ஓர்இரவு படைப்பிற்கு முதல்பாடல்
           அருமையாய் வடித்ததாலே பாடல்கள் வந்தனவே
திண்மையாக கு.மாபாவின் அணைத்துப்பா டல்களுமே
           தேனோடு கலந்திட்ட தௌ;ளுதமிழ் பனுவலன்றோ
மண்ணவர்கள் சித்திரம்பே சுதடிசிங்கா ரவேலனையும்
           மலரும்வான் நிலவையும்அ முதைப்பொழிநி லவுதனையும்
விண்தன்னின் காற்றலையில் செவியுற்றால் எண்ணற்றோர்;
           வானத்தில் பட்டாம்பூச் சியாகஇன்றும் பறப்பார்;கள்

காலத்தால் கடந்துநிற்கும் கருத்துமிகு பாடல்கள்
           கலைமாம ணிதந்திட்ட தமிழ்சுவையின் மாண்பன்றோ
வேலவனார் தலைமையேற்ற வற்றாத செம்மொழியின்
           வசந்தங்கள் வீசுகின்ற கு.மாபாவின் சொற்களன்றோ
ஞாலமதில் கு.மாபாவின் வசனத்தை காளிதாசில்
           நல்கொஞ்சும் சலங்கையிலும் மனம்குளிரக் கேக்கலாமே
சீலமாக கு.மாபாவின் நூற்றாண்டு விழாவினையும்
          சிறப்புடனே தமிழர்கள் எல்லோரும் காணலாமே





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்