மூச்சுவிட முடியவில்லை!  

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு
 

கண்ணுக்குத் தெரியாத                      
கொரோனாவிற்கு
கறுப்பு
வெள்ளை என்ற
நிறபேதம்
தெரியாது! - ஆயினும்
மூச்சுவிட
முடியாமல்
முடிந்து
போயிற்று...
எண்ணற்ற
அமெரிக்கர்களின்
சுவாசக்
காற்று!

கலவரப் பகுதியாய்
கொலம்பஸ்
கண்ட தேசம்! - இன்று
சமூக
இடைவெளியின்றி
சாரை
சாரையாய் மக்கள்!
வளரும்
வன்முறைத் தீயில்
வதங்கிக்
கிடப்பது ஏன்? - அன்று
செங்கோல்
தவறியதாலே
தீக்கிரையானது
மதுரை! - இன்று
இங்கோர்
வெள்ளையனாலே
எரிவது
நீதியைக் கேட்டு! 

கறுப்பு நிறபேதம் பார்த்து
காட்டுமிராண்டிபோல்
,
வெறிகொண்ட
மிருகமாய்
வெள்ளைக்
காவலன்
மூச்சுவிட
முடியாமல்
முட்டிக்
காலினால் - கறுப்பரின்
மூச்சுக்
குழாயை
முறித்துக்
கொன்றான்!
வெறித்துப்
பார்த்த
வெள்ளையர்
எல்லாம்
வெட்கித்
தலைகுனிந்திட வேண்டும்! 

உதிரத்தைக் குடிக்கும் இந்த
உக்கிர
வெறியாட்டத்தை,
அதிகார
வரம்பு மீறிய
ஆதிக்க
இன பேதத்தை,
சதிகார
வெள்ளையர் இவர்களை
சடுதியாய்த்
தூக்கில் ஏற்று!
விழிகளே
சாட்சிகள் இதற்கு!
வேண்டுமா
விசாரணை தீர்ப்பு?


        
    



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்