எப்படியோ நிகழ்கிறது காதல்

வித்யாசாகர்

உனக்கு ஒரு
கடிதமெழுதினேன்..

கடிதத்தின்
வார்த்தைகளில் எங்குமே
காதலில்லை
காதலிப்பதாய் சொல்லவில்லை

காதல்இ அக்கறை மிக்கதெனில்;
என் அக்கறையையும்
காதலென உணர்க!!
-------------------------------------------

இப்போதெல்லாம்
நான் அதிகம் உன் நினைவோடு
இருக்கிறேன்;

உன்னை பற்றியே
எண்ணுகிறேன்;

உனை பார்ப்பதில்
உன் அருகாமை கொள்வதில்
முனைப்பாகிறேன்;

காலத்திற்கும் நீ
கிடைப்பாயா என்றே
ஏங்குகிறேன்;

கிடைக்காவிட்டால்
என் நிலை என்ன என்றே உணராமல்
எப்படி நிகழ்கிறதோ;
இத்தனையும் உன்மேல்???!!
----------------------------------------------
காலங்களை கடந்தும்
நிறைய மனசுகள்
மாறாமலிருப்பதில்லை.

மாறிப் போகும் போது
மாறட்டும் என் மனசும்.

அதுவரை உனையே
நினைத்திருக்க -
உன் பார்வையை மட்டும் எனக்கு
கடன் கொடு.

உயிர்பிரியும் விளிம்பில்
உனை மறக்கும் மனசு ஒருவேளை
கிடைக்கலாம்இ

அந்த கிடைப்பில்
உன் பார்வைகளாவது
மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!!
---------------------------------------
நீயும் நானும்
தெருவில் நடந்து செல்கிறோம்.

நீ விலகி விலகி
நெருங்கி வருகிறாய்..

நான் உனை நெருங்கி நெருங்கி
விலகிப் போகிறேன்..

எப்படியோ மாறி மாறி
நெருக்கம் கொண்டு விடும் நம்
ஸ்பரிசத்தில் -
தெருவோரப் பூக்களாய்
மலர்கிறது நம் காதலும்!
-----------------------------------------
கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;

நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!



vidhyasagar1976@gmail.com