துன்பமே இன்பத்தின்
மறுபெயர்.
புலவர் முருகேசு
மயில்வாகனன்
ஒன்றாய்ப் பலவாக ஓங்காரத்
துள்ளிருக்கும்
என்றும் உளதான எம்பெருமான் – நன்னோக்காய்
அன்றலரும் பூப்போல் அகமகிழ வைக்கின்ற
அன்புருவம் கொண்டவரே ஆம்.
இயற்கை ஒறுத்தால் ஒளிமயம் ஏது?
வயற்கா டழியும் வறுமை – தயங்காது
நோய்நொடிகள் மேலோங்கும் நோற்பார் இலராகி
மாய்ந்திடுவர்இ திக்கற்றே வாழ்வு.
ஊடலும் கூடலும் ஒன்றிணை யும்போல
நாடிவரும் நோயும் நலன்நோக்கி – தேடிவரும்
வாடிடாது வெல்வதுவே வாழ்வின் நெறிமுறை
கோடிடாதே கொல்லும் கொரோனா.
செல்வம் பெருக்கிச் சிறப்புற்ற சீனாவின்று
அல்ல லுறும் நாடாய் அவலமுடன் – சொல்லொணாத்
துன்பத் துயருடன் சேர்ந்த கொரோனாவால்
சின்னாபின் னப்படும் சீர்.
பாரே கொரோனாப் பயமோங்க மக்களின்
சீரே சிதைந்துகொள செப்பமுற – பாரோர்
அரசு பரிதவிக்க ஐயத்தைப் போக்கும்
உரமிக்க மாற்றுவழி காண்.
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றோ
தொல்லைதரு நோய்களைத் தந்துமே – செல்வத்தைச்
சீரழிப்ப தோடு சிறந்தநல் லாட்சி சிதைவதோடு
வேரொட டழிக்கின்ற வேட்பு.
துன்பம் வருங்கால் தூயவனைக் கைகூப்பி
அன்பாய் அரவணைத்தே ஆசிபெற்றால் – இன்பமே
உள்ளம் மலர்ந்திட்டால் உண்மை உணர்ந்திட்டால்
கள்ளமிலா வாழ்வின் களிப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|