கண்ணுக்குள்
பூத்த கனல்!
கே.பி.பத்மநாபன்
மென்பஞ்சு மேனியளாய் மெல்லியல்பும் கொண்டவளாய்
அன்புறைந்த ஆலயமாய் ஆனவள்தான்:- தன்பலத்தை
விண்ணறியச் செய்ததந்த வீரமகள் கண்ணகியின்
கண்ணுக்குள் பூத்த கனல்.
அடிமைத் தளைநீக்கி ஆளும் நிலையைக்
கடிதில் பெரும்நல் கனவை- மிடிமையிலும்
மண்ணுக்குள் கண்டதுதான் மாக்கவியாம் பாரதியின்
கண்ணுக்குள் பூத்த கனல்.
நாள்குறித்த நாதனுக்காய் நங்கையவள் காத்திருந்தாள்;
தோள்மெலிந்தாள்; நோயால் துவண்டிருந்தாள்;-
நாள்கழித்துக்
கண்டவுடன் நாயகனைக் கொன்றதந்த நங்கையவள்
கண்ணுக்குள் பூத்த கனல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|