பல்வேறு கதைகள்

இவள் பாரதி

பேருந்திலிருந்து
இறங்குகையில்
கம்பியில் நசுங்கி
எனது இடது கையின்
மோதிரவிரலில்
இரத்தம் கொட்டி
காயமேற்பட்டது..

இரு சக்கரவாகனமொன்றை
தனியாக ஓட்டக் கற்ற
முதல் நாளில்
வளைவொன்றில் விழுந்து
எனது வலது முழங்காலில்
சிராய்த்து இரத்தம் கொட்டியது..

நீச்சல் கற்றுக் கொண்ட போது
தோழியின் வளையல் குத்தி
எனது நெற்றியின் ஓரத்தில்
காயமேற்பட்டது..

இப்படியாக
உடலிலிருக்கும்
ஒவ்வொரு தழும்புகளுக்கும்
பல்வேறு கதைகளைச்
சொல்ல முடியும் என்னால்..

என் நெஞ்சில்
வழிந்து கொண்டிருக்கும்
இரத்தத்திற்கும்
காயத்திற்கும்
வேறெந்த காரணங்களையும்
கதைகளையும்
சொல்ல முடியவில்லை
உன்னுடனான காதலைச்
சொல்வதைத் தவிர..



devathaibharathi@gmail.com