அச்சுவேலியூர் கணேசன்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
சந்தக் கவிதைகள் செந்தமிழில் யாத்துமே
சிந்தை குளிரச் செதுக்கிடும் - எந்தனது
அச்வேலி யூர்கணேசன் அன்பான பண்பினை
எச்சத்தில் கண்டோமே நாம்.
வெள்ளைமனம் கொண்டோன் வையகத்தின் மேடைகளில்
அள்ளித் தருவார் அரும்பாவை - உள்ளம்
குளிரும் சிறந்த குரலினால் மக்கள்
கனிவுடன் கேட்ப்பார் கனிந்து
தொண்டு புரிவாய் தமிழினைக் காதலித்;தாய்
கண்ணாய்; மனைவியைக் காத்துமே - பண்பான
பிள்ளைகளைப் பெற்று படிப்பித்து பாரினில்
தௌ;ளிய வானமாய் வாழ்ந்து
கவிஞரைப் போற்றிக் கடமையும் செய்தாய்
கவிபாடி வானலையில் கற்றோர் - புவியில்
புகழ்ந்திட பாமரர் போற்றும்க ணேசர்
இகத்தில் தமிழாய் நிலைத்து.
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்