ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி


தண்ணீர் ஊற்றவில்லை
மரம் வைத்தவன்
காய்ந்தது மரம்!

கோடிகளில் செலவழித்தும்
குறையாமல் கூடியது
தொற்று!

முதியோர் மட்டுமல்ல
இளையோரையும் தாக்கியது
கொடிய கொரோனா!

இல்லை ஆனால்
இருக்கு
சமூகப் பரவல்!

முடிவின் தாமதத்தால்
முடிந்தது பல உயிர்
பயத்தில்!

திட்டங்கள் தீட்டியும்
தடுக்க முடியவில்லை
கொடிய கொரோனா!

அழுக்குக் கூடையானது
துவைக்கும் கருவி
இல்லங்களில்!

அமைச்சர்கள் தொடங்கி
அமிதாப்பச்சன் வரை
தொற்றியது தொற்று!

வல்லரசையும்
நலிந்த அரசாக்கியது
கொரோனா!

வேண்டிய போது வராமல்
வந்தது அறுவடை நாளில்
மழை!

கண்ணுக்குத் தெரியாமலே
கண்ணில் விரல் விட்டு ஆட்டுது
கொரோனா!

வேலை அதிகம்
ஊதியம் குறைவு
நிறுத்தம் அகவிலைப்படி!

வணிகர்களின்
சுதந்திரம் பறித்தது
கொரோனா!

நன்றன்று
பாசிட்டிவ்
கொரோனா வேதனையில்!





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்