பகைவன்
யார்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பகைவன்யார்
படையெடுத்துத்
தாக்கு
கின்ற
பக்கத்து
நாடுகளா;
நெஞ்சிற்
குள்ளே
புகைகின்ற
காழ்ப்பாலே
அழிக்க
எண்ணும்
புறத்தினிலே
தெரியாத
சுற்றத்
தாரா !
நகைத்தபடி
தோளின்மேல்
கையைப்
போட்டு
நண்பனென
முதுகினிலே
குத்து
வோனா
தொகைதன்னைக்
கடனாகக்
கொடுத்துப்
பின்பு
தொடர்ந்ததனைக்
கேட்டபதாலே
மாறு
வோனா !
யார்பகைவன்
நம்வாய்ப்பைப்
பறித்துக்
கொண்டு
யாதொன்றும்
அறியான்போல்
எதிர்நிற்
போனா
பார்வையிலே
பரிவுதனைக்
காட்டல்
போன்று
பக்கத்தில்
நின்றுகுழி
வெட்டு
வோனா !
ஊர்தன்னைக்
காப்பவன்போல்
இனிக்கப்
பேசி
உள்ளவற்றைச்
சுருட்டுகின்ற
ஆட்சி
யோனா
மார்தட்டித்
தோள்தட்டிக்
கடுஞ்சொல்
வீசி
மற்றவரை
அடக்குகின்ற
வலிமை
யோனா !
பொல்லாத
பகைவன்யார்
சாதி
தன்னைப்
பொறித்திங்கே
கலவரத்தைத்
தூண்டு
வோனா
சொல்லினிலே
அச்சமூட்டி
மூடத்
தனத்தில்
சொந்தறிவை
மழுங்கவைக்கும்
சூழ்ச்சி
யோனா !
இல்லையில்லை
அனைத்துவகை
பகைமை
கட்கும்
இன்னலினை
வளரவைத்துத்
துடிக்க
வைக்கும்
இல்லையென்ற
வறுமையொன்றே
மூல
மாகும்
இதையொழித்தால்
உலகமெல்லாம்
நட்பாய்
மாறும் !