தவறில்லை (ஹைக்கூ)

கவிஞர் இனியன்

குழி பறிக்கலாம்
தவறில்லை
மரம்
நடுவதற்காக. 

போட்டுக் கொடுக்கலாம்
தவறில்லை
பசிக்கும்
குழந்தைக்கு. 

பொய் சொல்லலாம்
தவறில்லை
பிறர்க்கு
நல்லதெனில். 

கொன்று வீழ்த்தலாம்
தவறில்லை
நாட்டுக்காக
. 

தீண்டாமை
தவறில்லை
கோவிட்
19 

இல்லையெனச் சொல்
தவறில்லை
சிகரெட்
. 

கோபம் கொள்
தவறில்லை
கையூட்டு
கேட்டால். 

ஓய்ந்து கிட
தவறில்லை
உழைப்புக்குப்
பின். 

கணவனை அடித்தால்
தவறில்லை
குடிகாரன்
என்றால். 

பிச்சை எடுக்கலாம்
தவறில்லை
படிப்புக்காக
. 

சாலையின் வலப்புறம்
ஓட்டுவது
தவறில்லை
கனடாவில்
!

 

                        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்