தொழிலாளர் நாங்கள்
புலவர் முருகேசு மயில்வாகனன்
சிந்து
செய்யும் தொழிலே –
தெய்வம்
தேர்ந்து கொண்டாலே தேறுமே வாழ்வு
வையம் சிறக்கவே –
நாங்கள்
வாய்ப்பாய்த் தொழில்செய்து வாழ்வில் உயர்வோம்
தெய்வம் நமக்குத் - துணையே
தேசியம் காக்கவே தேர்ந்த தொழில்களை
மெய்யை வருத்தியே செய்து மகிழ்வோம்.
ஆடைகள் நெய்வோம் –
மற்றும்
ஆலைகள் தோறும் அரும்பணி செய்வோம்
மூடைகள் தூக்குவோம் –
முனைப்பாய்
மாற்றுத் தொழில்களை மனமாகச் செய்வோம்
காடுகள் வளர்ப்போம் –
களனிகள்
காலத்துக் கேற்பவே காய்கறித் தோட்டங்கள்
மாடு வளர்ப்பது –
எங்கள்
மாண்பான தொழிலென்று மார்தட்டி சொல்வோம்.
கூலித் தொழிலாளர் –
நாங்கள்
கூடித் தொழில்செய்தே கூடி மகிழ்வோம்
ஆலைத் தொழிலாளர்க்கு –
ஆங்கு
ஆற்றும் தொழிலுக்கு ஆனதோர் சங்கம்
வேலை நிறத்தத்தை –
விரும்போம்
வெற்றியைக் காண்போம் விரைவிற் பேசியே
சீலமுடைத் தொழிலாளர் –
நாங்கள்
செய்யும் தொழிலைச் சீராகச் செய்வோம்.
வேலை தருனரோடு –
வேட்பாய்க்
கலந்து பேசியே காண்போமே வெற்றி
சீலத்தைக் காக்கும் –
சிந்தையர்
சிறப்பாய்ப் பணிசெய்தே சீர்பெறு வோமே
காலத்துக் கேற்பவே –
காண்போம்
கடின உழைப்பாலே காட்டுவோம் வெற்றி
மூல முதலீடு –
செய்வோர்
முற்றுந் தெரிந்த தொழிலகம் காண்பர்.
‘குதர்க்கம் விளைத்தே –
பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடீஸ்வர ர் பலபேர்
எம்ரத த்தைப்பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே
நிதியின் பெருக்கம் –
விளை
நிலமுற்றும் உங்கள் வசமாக்கி விட்டீரே’
சதிசெய எண்ணிடில் –
நாங்கள்
சாதித்துக் காட்டுவோம் சலிப்பேது மின்றியே!