உன்னுள் உன்னைத் தேடு

மதுரை பாபாராஜ்

மண்ணுக்குள் வைரமுண்டு!
மாக்கடலுள் முத்துண்டு!
பொன்னுக்குள் ஒளியுண்டு!
பூவுக்குள் மணமுண்டு!
தென்றலுக்குள் இதமுண்டு!
செந்தமிழில் அமுதுண்டு!
பண்ணுக்குள் பாடலுண்டு!
பாருக்குள் அனத்துமுண்டு!

இயற்கையெல்லாம் எதைநாடி
எங்கெங்கு அலைகிறது?
செயற்கையாக மனிதனேநீ
தேடியேனோ அலைகின்றாய்?

எதுஇல்லை உன்னிடத்தில்?
ஏக்கத்தை விட்டுவிடு!
புதையலின் சுரங்கமே!
புதுமையின் விளைநிலமே!
புதையலே உன்னுள்தான்!
புரிந்துகொண்டு நடைபோடு!
விதைப்பதும் உன்னுள்தான்!
விளைச்சலும் உன்னுள்தான்!

உன்னுள்ளே உன்னைத்தான்
உண்மையாகத் தேடவேண்டும்!
மண்ணகமே உன்கையில்
வசப்படுமே மானிடனே!
 

spbabaraj@gmail.com