ஹைக்கூ

நாகை ஆசைத்தம்பி, கோவை

 

ஜாதகம் பார்க்கக் கூட்டம்

நல்ல நேரம் பிறக்கிறது

சோதிடருக்கு,

 

கொரோனாவில் இறந்தவன் கையில்

பத்திரமாய் இருக்கிறது

ஆயுள் ரேகை

 

சாதி சண்டையில்

பூட்டிக் கிடக்கிறது

ஊர் காவல் தெய்வம்

 

தும்பைவிட்டு வாலைப் பிடிப்போம்

நடந்து முடிந்த நிகழ்வுக்கு

அறிக்கை அரசியல்

 

கற்பழிக்கப்பட்டபெண் உடல்

கொழுந்துவிட்டு எரிகின்றது

தடயங்களுக்கான ஆதாரம்

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்