காதல் கவிதை
ஆ.முத்துவேல்
உன் ஆணவம் எனக்கு பிடிக்கும் ,
என்னை விட, நீ என்னை அதிகமாக காதலிபதால்.............
உன் கர்வம் எனக்கு பிடிக்கும் ,
உன் அன்பால் , நீ என்னை கட்டி போடுவதால் ..
உன் வெட்கம் எனக்கு பிடிக்கும் ,
என் பெயரை நீ சொல்வதால் ...
உன் வீரம் எனக்கு பிடிக்கும் ,
என்னை யாரிடமும் விட்டுகொடுகாமல் பேசுவதால் ..
உன் சோகம் எனக்கு பிடிக்கும் ,
என் மேல் சிறு தூசி விழுந்ததால் .....
உன் சந்தோசம் எனக்கு பிடிக்கும் ,
என் வெற்றியை நீ ரசிபதால் ....
உன் பயம் எனக்கு பிடிக்கும் ,
நான் மழையில் நனைவதால் ...........
உன் களவு எனக்கு பிடிக்கும் ,
என் மனதை நீ திருடிவிட்டதால் ..................
உன் வன்முறை எனக்கு பிடிக்கும் ,
என் தவறுகளை நீ கண்டிபதால் ....................
உன் எரிச்சல் எனக்கு பிடிக்கும் ,
என் ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவதால்.............. ..
உன்னை மட்டுமே எனக்கு பிடிக்கும் .
நீ என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதால் ...........
எண்ணங்களை எழுத்தாகியவர்,
muthuvel_a2000@yahoo.co.in
|