மரநிழல் தவம்..

நச்சியாதீவு பர்வீன்

தாகம் தொடரும்
கனவுச்
சோலையில்
ஒரு
மிருகத்தின்
கொடுரமான
உருவமாகவே
நீ
தெரிகிறாய்..

உலகின் ஒட்டு மொத்த
அக்கினிகளையும்
உன்
கண்கள்
விழுங்கியிருக்க
வேண்டும்

விகாரம் கொண்ட
உன்
மூக்கின் பருமன்
தர்ப்பாரையாக

மிக
நீண்ட தூரத்திற்கு
விசாலித்து
இருக்கிறது

நரைத்தும் நரைக்காமலும்
உன்
கேசம்..
இமைகளுக்குள்
இருந்து
வெளிப்பட்டது
..

நீ ஆணா? அல்லது பெண்ணா?
ஒன்றும்
புரியவில்லை
எனக்கு

என்மரநிழலில்
உனக்கென்ன
  வேலை
என் முகவரி

யார்
தந்தது உனக்கு?

எந்த தேவதையின்
சாபத்தினால்
நீ இப்படி
ஆகிப்போனாய்
?

என் கேள்விகளுக்கு
இன்றில்லாவிட்டாலும்

நாளையாவது
பதில் சொல்லு
அத்தோடு
என் மரநிழலை
உனக்கு
சொந்தம்
 என்று மட்டும் வாதிட வராதே!



armfarveen@gmail.com