வாராத சாமிகள் ....

மட்டுவில் ஞானக்குமாரன்

மரங்கள்
தோறும்
புத்தர் தலைகள்
குளக்கரைகள் தோறும்
பிள்ளையார் சிலைகள்
இருந்தும் என்ன யாரும் வரவில்லையே
எமைக்காக்க ...!

யேசு
விஸ்ணு
புத்தன்
அல்லா என
எல்லா நாட்டு தெய்வங்களும்
என்வீட்டு சாமி அறையிலே
இருந்தும் என்ன
என்வீட்டு அழுகுரல்
கேட்டு யாரும் வரவில்லையே ....!





maduvilan@hotmail.com