நீயற்ற தனிமைப்
பயணத்தில்...
மன்னார் அமுதன்
மலையகத்தின்
உறை
குளிரில்
தோளில்
சாய...
கைகளைப்
பிணைத்துச்
சூடேற்றி...
தலைமுடி
கோதி
காதருகே
முடி
சுழற்றி
காதலோடு
கழுத்தில்
முத்தமிட...
எவரும்
தயாரில்லை
இடையிடையே
நாசி
தொடும்
மண்
மணத்தில்
உனை
நினைக்க
நாம்
உச்சரிக்க
மறந்த
வார்த்தைகளை
மட்டும்
பேசிக்
கொண்டிருக்கிறது
நம்
காதல்
amujo1984@gmail.com
|