எப்படியோ
இனிக்கிறது
தீபாவளி
வித்யாசாகர்
வாழ்வின்
சுவரெங்கும்
மழை
பெய்த
நீராய்
ஒரு
சோகம்
அடங்கியதன்
ஈரங்கள்;
ஈரங்களை
கடந்து
வெடிக்கும்
பட்டாசு
சப்தத்தில்
எப்படியோ
இனிக்கிறது
தீபாவளி!
கண்ணீர்
கடன்
பட்டினி
வறுமை
என
துரத்தும்
ஏழ்மையின்
ஓட்டங்கள்;
நாளைய
ஒருவார
உணவு
செலவில்
வாங்கிய
ஆடைகளால்;
எப்படியோ
இனிக்கிறது
தீபாவளி!
குழந்தை
தொழிலாளி
எதிர்ப்பு,
மாணவர்கள்
வளர்ச்சித்
திட்டம்
என்றெல்லாம்
ஆயிரமாயிரம்
பொய்கள்;
பொய்களையுடைத்து
சீறி
வான்
முட்டும்
- வண்ண
வண்ண
ராக்கெட்
வெளிச்சத்தில்;
எப்படியோ
இனிக்கிறது
தீபாவளி!
மரணம்
வலி
ஏக்கம்
இயலாமை
நோய்
போதை
எல்லாமுமாய்
தின்றுதுப்பிய
உயிர்;
எல்லாம்
மறந்து
பார்த்த
மழலையின்
சிரிப்பிற்காய்
செய்த
பலகாரத்தில்;
எப்படியோ
இனிக்கிறது
தீபாவளி!
இறுதிவரை
நேர்த்தியில்லாத
வரலாறு
ஏதோ
சொல்லிக்கொள்ள
பாரம்பரியம்
வாய்
பேச்சிற்கென்று
ஒரு
கலாச்சாரம்
முழுமையை
தராத
கற்பித்தல்;
எல்லோருக்கும்
பொதுவில்லாத
வழிபாடு
மனிதரை
கொள்ளும்
மதப்பிரிகை
வேற்றுமையை
வளர்க்கும்
ஜாதியமைப்பு
முற்றும்
தீராத
தீண்டாமை;
இன்னும்
மடியும்
மகளீர்
சமரசமுறாத
கற்பு
திணிப்பு
வெட்ட
வெட்ட
துளிர்க்கும்
சமுதாய
சீர்கேடுகள்
எல்லோரும்
பெறாத
இறைஞானம்
- என
இழைக்கப்
படும்
அத்தனை
கொடுமைகளும்
சேர்ந்து
கொடுக்கும்
- ஒழியா
- மானுட
வதைகளை
கடந்தும்
தன்
பெற்றோர்
காட்டிய
பாதையில்;
எப்படியோ
இனித்துத்
தொலைக்கிறது
தீபாவளி!!
vidhyasagar1976@gmail.com
|