அஃறிணைப்பிறவி (ஹைக்கூ
கவிதைகள்)
முனைவர் ச.சந்திரா
இந்த கலியுகத்திலும் உண்மையை
மட்டும் உரைக்கும் உன்னதபிறவி
நிலைக்கண்ணாடி !
எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளும்
சாதிமதபேதமில்லா சன்மார்க்கப்பிறவி
காகிதம்.
இரவுபகலாக மழைவெயில் பார்க்காமல்
அறிவிப்புப்பணி செய்யும் அஃறிணைப்பிறவி
விளம்பரப்பலகை !
ஆயிரமாயிரம் சக்கரங்களின் அதிர்வுகளைச்
சந்தித்தாலும் சாந்தமாயிருக்கும் சாமான்யப்பிறவி
தார்ச்சாலை !
எதிர்கேள்வி கேட்காமல் கட்டளைக்கு
கீழ்ப்படியும் வெள்ளைநிறக் குள்ளன்கள்
மின்பொத்தான்!
உள்ளதை உள்ளபடியேத் திருப்பிக்கொடுக்கும்
பரந்த உள்ளம் கொண்ட பனிப்பிறவி
குளிர்சாதனப்பெட்டி!
neraimathi@rocketmail.com
|