காலப் பெருவெளி

பனித்துளி சங்கர்

ன் நினைவுகளால் உறக்கம்
தொலைத்தப்
பல இரவுகளின்
காலப்
பெருவெளியில்
இன்னும்
கடந்துகொண்டிருக்கின்றேன்

 

கைகளில் ஆயிதம் இல்லை
கற்பனைகளுடன்
தினமும் மோதி மோதி
காயப்படுகிறது
நிஜங்கள் .
 

ன்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொருவரின்
பார்வைகளிலும்
ஏதோ
சொல்ல நினைத்து கரைந்துபோன
சோகங்களின்
வார்த்தைகளை எல்லாம்
அவர்களின்
உதட்டு சுளிப்புகளில்
மொத்தமாய்
என்னை நோக்கி
வீசி
செல்கிறார்கள்

ங்கேனும் சிதறும்
சிரிப்பின்
சத்தங்களில் எல்லாம்
மீண்டும்
உன் ஞாபகங்கள்
என்
இதயத்தை நிரப்பி செல்வது
வாடிக்கையாகிப்போனது
.

 காற்றின்றி இறந்து போகும்
ஒரு
புல்லாங்குழலின் இசையாய்
தினம்
உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன்
இறந்து போகிறேன்

 நான் ஆடை கிழிந்த
பைத்தியம்
என்றுதான் எல்லோருக்கும் தெரியும்
ஆனால்
யாருக்குத் தெரியும்
உன்
நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன்
என்று..!!

 

shankarp071@gmail.com