நட்சத்திரங்கள்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
வானில்
தொங்குமிவை
சரவிளக்கா!
வானிலே
ஒரு
கார்த்திகைத்
தீபமா!
ஈர
உடலிலொட்டிய
காய்ந்த
மணலா!
வைரங்களோ!
கண்
பறிக்கும்
போலிகளோ!
மெழுகுவர்த்தித்
தீபத்தால்
நான்
ஒழுகவிட்ட
நீருள்
மணிகளா!
மாதுளை
முத்து
மணிகளையென்
மழலை
உதறிவிட்டாளோ!
வான
மல்லிகைப்
பந்தலின்
மின்னும்
அழகு
மல்லிகைகளோ!
நீலமேகக்
கன்னியுன்
மேனியில்
மின்னும்
நவீன
அழகுப்
பொட்டுகளோ!
சாலம்
காட்டும்
மின்மினிப்
பூச்சிகளோ!
நீலப்
பட்டில்
தைத்த
முத்துக்களோ!
வானக்
கடலின்
இரவுத்
தங்க
மீன்குஞ்சு
நட்சத்திரங்களோ!
கவிதையாம்
சொற்
சித்திரம்
விதைத்த
பாடுபொருள் -
நட்சத்திரங்கள்.
இதயக்
கலசத்தால்
கொட்டி
வழிந்தவை
தமிழ்
சொற்
குவியல்
நட்சத்திரங்கள்.
kovaikkavi@gmail.com
|