பெண் அன்றும் இன்றும்
முனைவர் ச.சந்திரா
கண்ணீரோடு காலத்தைக் கழித்தாள் பெண் அன்று !
கணினியோடு காவியம் படைக்கிறாள் இன்று !
பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாய்
அலைக்கழிக்கப்பட்ட ஊஞ்சல் -பெண் அன்று !
இல்லத்திற்கும் அலுவலகத்திற்குமாய் அலைபாய்ந்து
வாழ்வைப் பலப்படுத்தும் அஸ்திவாரம் -பெண் இன்று !
பரமஹம்ஸருக்கு சாரதாதேவி ;
வள்ளுவருக்கு வாசுகி
சிவாஜிக்கு ஜீஜாபாய்
;
காந்திக்கு கஸ்தூரிபாய்
;
இன்றோ உதாரணத்திற்கு ஒன்றல்ல !இரண்டல்ல !
பல்லாயிரம் பெண்கள் பாதகங்களைச் சாதகமாக்கி
உலக
வரலாற்றில்
உலா !
விளையாட்டோடு விண்வெளி
;
அறிவியலோடு ஆன்மீகம்
;
கவியரங்கோடு கருத்தரங்கம்
;
கல்வித் துறையுடன் காவல்துறையென
தரணி எங்கும் பெண்ணின் தடம்பதிப்பு
எனும் உண்மைக்கு இல்லை என்றும் மறுப்பு !
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
பெண்மைக்கே உரிய நளினங்கள்தான் !
பெண்ணே !காளிதாசனும் கம்பனும் பகர்ந்த
பெண்மை இலக்கணத்தைப் பொய்யாக்கிக் காட்டு !
மெல்லினத்தோடு வல்லினத்தையும் இணைத்துப் பார்!
பெண்ணே !உன் இளம்கரங்கள் இரும்புக் கரங்களாகட்டும்!
கேள்விக் குறியிலிருந்து பெண்ணினம் விலகட்டும் !
ஆச்சிரியக் குறியாய் மாறி அகிலத்தையே இனி ஆளட்டும் !
|