அம்மாயெனும் தூரிகையே
வித்யாசாகர்
என்
வாழ்வின்
ஓவியத்தை
வரையும்
தூரிகையே
-
உந்தன்
வளர்ப்பின்
வண்ணத்தில்
அழகுடன்
மின்னுபவன்
நான்;
பாட்டின்
ஜதிபோல
எனக்குள்
என்றும்
ஒலிக்கும்
உயிர்ப்பே
- உன்
அசைவில்
மட்டுமே
அசைந்து
-
நீ
அணைந்தால்
அணையும்
விளக்கு
நான்;
நடைபாதையின்
முட்களை
மிதித்து
- என்
கால்வலிக்கா
பூமிமலர்களாய்
பூத்துப்
போன -
அர்ப்பணமே
உன்
அன்பிற்கு
- அன்றும்
இன்றும்
நீ
மட்டுமே;
நீ
மட்டுமே;
உனக்கு
ஈடானாய்!
உண்மையில்,
காற்றின்
சப்தத்தை
இசையாக்கிக்
கொடுத்த
ஒரு
யாழின்
பெருமை
-
உன்னையே
சாரும்
அம்மா!
இனியும்,
வாழ்க்கை
என்று
ஒன்று
உண்டெனில்
இன்னொரு
பிறப்பென்று
ஒன்று
உண்டெனில்
நீ
யாருக்கு
வேண்டுமாயினும்
அம்மாவாக
இரு
நான் -
உனக்கு
மட்டுமே
பிள்ளையாக
- பிறப்பேனம்மா!!
vidhyasagar1976@gmail.com
|