காதல் உடன் படிக்கை
பனித்துளி சங்கர்
சிறகுகள்
இன்றி பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
இத்தனை வருடங்களில் இல்லாத
மாற்றங்கள் கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில் அழகாய் தெரிகிறது..!
உன்னைப்
பற்றிய நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக பெருவேளிகளில்
பாலைவனங்களின் நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில் அலை மோதுகிறது..!
இத்தனை
நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!
எழுத்தாணி
தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!
அலைகளாய்
நீ
உதிர்க்கும் வார்த்தைகளில் எல்லாம்
தினம் கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!
அருகில்
இல்லாத உன் உருவம்
விழி போகும் திசை எங்கும்
பின் தொடர்கிறது
உடன் வரும் நிழலாய்...!
எங்கோ
தூரத்தில் கசியும் இசையில்
மெல்லக் துயில் கொள்கிறது
உன் நினைவுகள..!
உன்
நினைவுகளை எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!
நுரையீரல்
தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!
shankarp071@gmail.com
|