காத்திருக்கிறேன்
எஸ்.
பாயிஸா அலி,கிண்ணியா
உனக்காகத்தான் ......
இக்கவிதைக் கீறல்கள் உன்க்காகவேதான்.
நீ சூறையாடிய
எனதில்லத்து முற்றத்தில்
நெல்லுமணி பொறுக்கிய சிட்டுக் குருவிகளும்......
உன் எரிநீரில் கருகிப்போன
ரோஜாச் செடிகளுக்குள்
வாயுறுப்பிறக்கி அமுதம் உறிஞ்சிய
வண்ணத்துப் பூச்சிகளும்......
இடிந்து கிடக்கும் ஆலைக்களமதில்
இறக்கை சடடத்துப்பறந்த சோடிப்புறாக்களும்.......
இன்னும்...
குறுணல் கிளறிய குஞ்சுகளும்....
கொத்தித் திரிந்த சேவல்களும்.......
நொறுங்கிய கண்ணாடித் தொட்டியுள்
ஒளிந்து விளையாடிய தங்க மீன் குஞ்சுகளும்
எங்கெங்கு த்விக்கின்றனவோ.
கடலாய் நின்றவரைசோறு போட்டாலும்
கரை தாண்டியதும்கூறு போட்டவனே.....!
இதோ
உன்னாலல்லவா
என் மண்ணின்
தொன்மைச் செழுமைகள் பல பதிந்த
தோனாக் கரை
உயிர்ச்சுவட்டு எச்சங்கள் தொலைந்துபோன
வெற்றிடமாகிக் கிடக்கிறது.
முன்வீட்டு;ஆயிஷாவும் ,ரியாஸும்
gpd;tPl;L R[hdhTk; k`Uhg; N]u;kfSம்
பக்கத்துவீட்டு பஜ்னூன் மாமியுமவர்
இடுப்பிருந்த பாலகன் ஹுஸைனும்
கோக்கியு மவர் மனைவியுமென
ஒட்டியுறவாடிய சுற்றமெலாம் உயிரற்ற பிணமாய்
மிதந்த கணமதனை எண்ணியெண்ணியே
நான்மட்டுமிங்கு நடைப்பிணமாய்.....!
சேவகர் விநியோகிக்கும் படிவங்களை மட்டும்
மாறிமாறி நிரப்பியபடியே
எம் வாழ்வியல் நம்பிக்கைகளோ
தற்காலிகக் கொட்டில் வெக்கைக்குள்
கரையுதே தண்ணீர் மேலெழுத்தாய்.
என்றாலும்.......
காத்திருக்கிறேன் பேரலையே!
பாலையாகிப்போன என் நெய்தல்
சோலையாகிக் குலுங்கும் நாளிலேனும்
சுருட்டிப்போன என் சொந்தங்களைத்
திருப்பித் தருவாயெனும்
கனவுகளோடும்.....நம்பிக்கைகளோடும்.
sfmali@kinniyans.net
|