முற்று
முரண்
ச.சந்திரா
இளநீர்
விற்பவன்
தாகத்துக்கு
தண்ணீர்
அருந்துகிறான்
அடிகுழாயில்.
புதுத்
துணி
தைக்கும்
தையற்காரனின்
மனைவி
கிழிந்த
சட்டையை
தைக்கிறாள்
கையால்.
வீடுதோறும்
நாளிதழ்
போடும்
சிறுவனின்
தந்தை
செய்தி
படிக்கிறார்
தேநீர்
கடையில்.
நர்ஸரிப்
பள்ளிக்கு
ஆட்டோ
எடுப்பவரின்
மகன்
நகராட்சிப்
பள்ளிக்குச்
செல்கிறான்
நடந்து
.
கேஸ்
அடுப்பு
பழுது
பார்ப்பவரின்
வீட்டில்
புகைகின்றது
விறகடுப்பு
!
ஊருக்கே
தங்கத்தாலி
செய்யும்
ஆசாரியின்
மனைவி
கழுத்தில்
பித்தளை
தாலி!
பங்களா
வீடு
கட்டும்
கொத்தனார்
வசிக்கிறான்
ஓலைக்குடிசையில்.
மலையும்
சமுத்திரமுமாய்
இருந்த
காலமெல்லாம்
மாறிப்
போய்
தேசத்தின்
நான்கு
பக்கமும்
வறுமையே
எல்லைக்கோடு
!
முரணின்
ஒட்டுமொத்த
வடிவமாய்.
!
|