யார் நீ...?

கீர்த்தி, கொழும்பு 




என்னோடு
பேசிக்கொள்ள;
என் உணர்வுகளோடு
ஒன்றிப்போக;
யார் நீ...?

என் எழுத்துக்களில்
உயிர் பெற்றெழ;
கருத்துக்களில்
கரு பெற்றெழ;
யார் நீ...?

என் மனவறைக்குள்
அமர்ந்துக்கொள்ள;
மதியோடு
ஒட்டிக்கொள்ள;
யார் நீ...?

தேடித் தேடி
அன்பு செய்ய;
விரட்டி விரட்டி
உதவி செய்ய;
யார் நீ...?

என் சோதனையில்
பங்கேற்க;
வேதனையை
பகிர்ந்து கொள்ள;
யார் நீ...?

என் வலிகளை
தாங்கி கொள்ள;
விழி நீரை
ஏந்திக் கொள்ள;
யார் நீ...?

எனை மடிமீது
சாய்த்துக் கொள்ள;
மனதோடு
சேர்த்துக் கொள்ள
யார் நீ...?

என் ஒளியில்
ஒளி சேர்க்க;
ஒலியில்
ஒலி சேர்க்க;
யார் நீ...?

தனக்கென வாழும்
உலகில்
எனக்கென
வாழ்ந்துவிட
யார் நீ...?



keerthyjsami@gmail.com