இரசவாதம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
மன்மதப்
பேரெழிழன்!
இன்ப
ஒளி
விழியால்
அன்பதை
ஊற்றி
இன்னல்
களைகிறாய்!
என்றும்
அன்பு
மொழியால்
வென்றிடும்
அமைதி
வழியால்
நன்றாய்
என்னுள்ளத்தில்
தென்றலாய்
நிற்கின்றாய்!
எந்தன்
அகத்தில்
சிந்தனைச்
சுதந்திரச்
சந்தனம்
கலக்குகிறாய்!
சந்திர
வதனத்தால்
நந்தவன
அழகிட்டு
தந்தனத்தோம்
இசைக்கும்
மந்திரக்காரன்
நீ!
வந்தனம்
உன்னுறவுக்கு.
மொழியோடு
விளையாட
வழி
தருகிறாய்!
இழிவற்ற
நட்பினால்
இதம்
தந்து
இகத்தில்
இணையில்லாத்
தோழனாய்
இலக்கணம்
வகுக்கிறாய்!
இயல்பான
அன்புறவால்
இரசவாதம்
செய்கிறாய்!
kovaikkavi@gmail.com
|