காதல்
பற்றி பாடலாசிரியர்களின் கவிதைகள்
பறக்கத்
தெரியும்
திசை
தெரியாது
காதல்
ஓர்இலவம்
பஞ்சு.
-
கபிலன்
என்னைத்
தவிர
யாரிடமும்
பேசாதே.
உன்
இதழ்களில்
நனைந்துவருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.
- பழநிபாரதி
ஒரு
பாதி
கதவு
நீ
மறு
பாதி
கதவு
நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து
வைக்ககாத்திருக்கிறோம்!
- நா.முத்துக்குமார்
காதல்
கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை
மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை
வாங்கிச்
செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!
- நா.முத்துக்குமார்
கொலுசு
உன்
கால்களோடு
போய்விட்டது!
சத்தம்
மட்டும்
என்
காதுகளோடே
வருகிறது!
- பா.விஜய்
எண்ணெய்
அப்பிய
ரெட்டை
ஜடையில்
சிக்கிவழுக்குது
மல்லிகைப்
பூவும்
என்மனசும்.
கம்பெனி
சைக்கிளில்
போகும்
உனை
வாடகை
சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை
சமீபிக்கையில்
அறுந்து
போகும்
செயினும்
என்
தைரியமும்.
பேச
முடிவதே
கொஞ்ச
நேரம்தான்!
வெட்கத்தை
வீட்டிலேயே
வைத்து
விட்டு
வரக்கூடாதா?
- பா.விஜய்
ரோஸ்
ஜஸ்
சாப்பிட்டு
வாய்
சிவக்க
நிற்பாய்!
நிற
மாற்ற
விதி
என்பது
இயற்பியல்
அல்ல
இதழியல்!
- பா.விஜய்
சின்ன
வயசில்
நிறையசிலேட்டு
குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது
வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப்
பற்றிஎழுதத்
தானோ?
- பா.விஜய்
இரவில்
ஒளிவிடும்
உன்
உடலைப்பார்க்கும்
வரைதெரியாது
எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்என்பது.
- பழநிபாரதி
யாரோ
நம்
பெயரைசுவரில்
கிறுக்கியிருந்ததைப்படிக்கும்
பொழுது
அச்சமாக
இருந்தது.
நேற்று
அதன்மீது
காதல்
திரைப்பட
போஸ்டரை
ஒட்டியிருந்ததைப்
பார்க்க
மகிழ்வாக
இருந்தது.
- கபிலன்
உன்
காலடியில்
ஊரும்
எறும்பைதயவுசெய்து
நசுக்கிவிடாதே
அது
இழுத்துவரும்
இரைநம்
காதலின்
பெயரெழுதிய
அரிசியாக
இருக்கலாம்.
- பழநிபாரதி
நீ
ஒரு
முறைதான்
பார்த்துவிட்டுப்
போனாய்என்
வீட்டு
ஆளுயரக்கண்ணாடி
உன்
நிழற்படமாகிவிட்டது.
- பழநிபாரதி
இரவும்
இரவும்
சந்திக்கும்
இரகசியமான
இடம்
உன்
கூந்தல்.
அதைவிட
இரகசியமான
இடம்
உன்
இதயம்.
அதனால்தான்
அங்கே
என்னை
நீ
என்ன
செய்கிறாய்
என்றேதெரியவில்லை.
- பழநிபாரதி
நீ
பருவமகள்
உண்மைதான்.
குளித்து
முடித்த
உன்கூந்தலில்
நீர்
சொட்டும்
போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ
பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை
அள்ளி
நான்
போர்த்திக்கொள்ளும்போது
குளிர்காலம்.
- பழநிபாரதி
ஆதாம்
ஏவாள்
கனவில்
ஆப்பிள்
துரத்துகிறது
ஆப்பிள்
கனவில்
பாம்பு
துரத்துகிறது
பாம்பின்
கனவில்சைத்தான்
துரத்துகிறது
அனைவரில்
கனவிலும்தோன்றி
கடவுள்
சொல்கிறார்
காதலித்து
கெட்டுப்
போங்கள்!
- நா.முத்துக்குமார்
உனக்கும்
எனக்கும்
பிடித்த
பாடல்
தேநீர்க்
கடையில்பாடிக்
கொண்டிருக்கிறது
கடைசி
பேருந்தையும்விட்டு
விட்டுகேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
- நா.முத்துக்குமார்
|