விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

வித்யாசாகர்

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல - நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்

லவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல - நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் - உரிமை குடிகள்

போட்டதை தின்று
விரித்ததில் தூங்கிப் போகும்
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல - நாம்
சரி தவறு அலசி தக்கவரை நிறுத்தி - நாட்டின்

வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்

விரல்நுனியில் மை பூசி - இருக்கை பெற்றபின்
தலைக்கு நெருப்பிடும் கைகளை
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் - நாம்
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????

டித்தவனை
திருப்பியடிக்கத்
தயங்காத நம் கைகள் -
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்
விட்டுவைத்ததில் சோடைபோனோமே அதுவும் தமிழராய்???!!!

ரும் தலைமுறைக்கு
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை
ஒவ்வொருமுறை - கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது
சிந்திக்காத கேவலத்தால் -
நாம்  செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???

ந்து வருடத்திற்கு
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி
ஒரு  குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து
வெட்டிச் செல்பவர்களை - இனி
விரட்டித் துரத்துவோம்

ஓட்டு போடுவதற்கென
அரிசி - யல்ல
அமிழ்தமே தந்தாலும்
தூக்கி முகத்தில் வீசுவோம்

மக்களின்
சுய புரட்சியின் அர்த்தத்தை
தேர்தலால் அனைவருக்கும்
விளங்கவைப்போம்

உனக்கும்
எனக்கும்
இத் தேசத்தின் நன்மைக்கும்
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்
சிந்திப்பவர்
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்!!



vidhyasagar1976@gmail.com