தொலைந்த ஒருவன் ....
கீர்த்தி
தனிஒருவனாய் நடக்கையிலே
தள்ளி நின்றது பாதை.
கால்களை ஊன்றி ஆடலாமென்றால்
கழுத்து வரை புதைந்த உடல்
எட்டி நின்று அழைத்து பார்த்தேன்.
எவனோ பதிலுக்கு அழைத்தான்.
கண்களை இறுக மூடினால் ..
பாவம்...
கண்ணீர் பஞ்சம்.
எதற்காக இவ்வுடல்?
என எண்ணியபோது இறப்பே எள்ளி நகையாடியது .
அதற்கு வேண்டும் தகுதி என்று ....
keerthinan@gmail.com
|