நாகரிகம்
ஆ.மணவழகன்
சாக்கடை
நாற்றத்தோடு
கழிவுநீர்
ஊற்றுகள்
அலங்காரத்திற்கு
மட்டும்
அணிவகுக்கும்
பறவைகள்
அமர்ந்தறியா
செயற்கை
மரங்கள்
முளைக்காத
தானியங்கள்
விதை
கொடுக்காத
கனிகள்
உயிரில்லா
முட்டைகள் -
தாய்
தந்தை
உறவறியா
குளோனிங்
குழந்தைகள்
ஆணிவேரில்
வெந்நீர்
ஊற்றும்
அறிவியல்
வளர்ச்சிகள்
ஆடுகளை
மலையில்
விட்டு
அருகிருக்கும்
கொல்லையில்
கதிரொடித்து
பால்
பருவக்
கம்பைப்
பக்குவமாய்
நெருப்பிலிட்டு
கொங்கு
ஊதித்
தாத்தா
கொடுத்த
இளங்கம்பின்
சுவைக்கு
ஈடு
இது
என்று
எதைக்
காட்டி
ஒப்புமை
சொல்வேன்
பச்சைக்
கம்பு
தின்றதே
இல்லை
ஆதங்கப்பட்ட
தோழிக்கு
tamilmano77@gmail.com
|