தலைப்பு செய்தி
வலங்கை இனியன்
தினமும்
தற்கொலை
என்ற தலைப்பு செய்தி
தினசரியில்
நேரத்தை வீணாக்கி
நேசத்தை வளர்க்கும்
நெஞ்சங்கள்
நித்திரையின்றி
நித்தம் அவள் நினைப்பில்
உலாவரும் உள்ளங்கள்
திருமணத்திற்கு குடும்பம்
மறுக்க
மண்ணெண்ணெய் அவர்களை
மணந்தது
கனவுகளுடன் இருந்த
காதலர்கள்
கருகி போன
கட்டைகள் ஆனார்கள்
காதல் இல்லையேல் சாதல்
என்றில்லாமல்
சாதல் இல்லையேல் காதல்
என்றாயிற்று.
|