தொல்லை கொடு
வலங்கை இனியன்
கடல்
அலையின் வேகம் காதைக் கிழித்தது
காற்றின் வேகம் நெஞ்சைத் தைத்தது
மக்களின் பேரிரைச்சல் மனதை ஒடித்தது
இத்தனைக்கும் நடுவிலே
ஆவள் வார்த்தைகளின் ஈரம் மட்டும்
ஒரு ஓரத்தில் நின்றது
பள்ளி வாழ்க்கை அல்ல பட்டென்று சொல்லிவிட
பருவ வாழ்க்கை அல்ல தரை பார்த்து சொல்லிவிட
கல்லூரி வாழ்க்கை அல்ல கால் கிறுக்கி சொல்லிவிட
காமத்தின் காதல் அல்ல உடல் அசைவில் சொல்லிவிட
கல்யாண வயது இது கண்வழியே வழிந்து ஓட
கேட்கிறேன் கேள்! என்னுயிரை தந்து விடு...
கண்ணாடி முன் பல மணிநேரம் பயிற்சி செய்தும்
அவள் முன்னாடி ஒரு சில வார்த்தைகளோடு – என்
காதல் சொல்லாமல் தோற்றுப் போனேன்
கொஞ்சும் சந்தனச் சிலையே – எனை
மிஞ்சும் என் ஆசைப் புயலே
கட்டிளங்காளை என்னை விட்டு விடு...
நினைவில் மட்டும் எனக்கு தொல்லை கொடு...
|