உளறல்கள்

வலங்கை இனியன்

நான் உன்னை கடக்கும் போதெல்லாம்
நீ என்னை கடத்திச் செல்கிறாய்!

உன்னை விலக்க நான் விலகுகிறேன்
உன்னை விளக்க நீ என்னுள் விழிக்கிறாய்!

உன் கண்கள் தவிர்க்க கதைகள் சொல்வேன்
உன் கண்களாலேயே கதைகள் கேட்பாய்!

உன்னை நான் மறந்துகொண்டே இருக்கிறேன்
என்னில் நீ மலர்ந்துகொண்டே இருக்கிறாய்!

உன் சிரிப்பை நான் அடக்கும் போதெல்லாம்
என் சினத்தை நீ அறுத்துக்கொண்டே இருக்கிறாய்!


நான் ஆத்திரத்தில் உன்னை கிள்ளும் போதெல்லாம்
நீ அன்பினால் என்னை அள்ளிச் செல்கிறாய்!

நான் உன்னை திட்டிக்கொண்டே இருக்கிறேன்
நீ என்னை திருடிக்கொண்டே இருக்கிறாய்!

உளறிக்கொண்டே இருப்பேன் போல
உனக்கான இடம்
என்னிடம் கிடைக்கும் வரை....!


 

siva.karthikeyan3@gmail.com