சொல்லுக்கும செயலுக்கும் நிலாத்தூரம்.

வேதா. இலங்காதிலகம்,ஓகுஸ், டென்மார்க்.

கொள்கைத் தூண்களெனும் வார்த்தைகள்
அள்ளி அமைக்கும் கோபுரம்
கொள்ளை கொள்வது யாவரையும்
சொல்லும் செயலும் நிசமானதும்.

சொற் கருத்தும் - செயலின் நினைப்பும்
வில் - நாணென இணைந்த முனைப்பில்
சொல் - செயலுக்கில்லை தூரம்.
சொல் செயலாகிட இல்லை நேரம்.

சொல்வதைச் செய்யாத மனிதனின்
சொல் - செயலின் தூரம்
கல் தொடா நிலாத்தூரம்.
சொல்லாமலிருப்பது உயர் தரம்.

'' சொல்லாமற் செய்வர் பெரியார்.
சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவர்...''
உதாரணம் சொன்னார் ஒளவையார்.

சொல்லெனும் பூ, செயலெனும் காயாய்
பூவாமற் காய்க்கும் பலாமரம் - பெரியார்.
பூத்துக் காய்க்கும் மாமரம் - சிறியார்.
பூத்தும் காய்க்காத பாதிரியாய் - கயவர்.



kovaikkavi@gmail.com