காலம் கடந்த

ராசை நேத்திரன் 

நீ என் கவிதைகளை 

வாசிக்கவில்லை என்றால்

கூட பரவாயில்லை  

கொஞ்சம் திரும்பி கண் 

சிமிட்டி விட்டு போ..

 

என் கவிதைக்கான திறவுகோல் 

உன் கண்களில் தான் உள்ளது

நான் விட்ட இடத்தில் இருந்து 

தொடர.....

 

காலமும் பூமியும் கூட 

புரையோடலாம் நம் 

காதல் புரையோடா 

இந்த பூக்கோளம் 

அழியும் வரை ...

 

முயற்சி செய்து வெற்றி 

பெற காதல் பரிட்சை இல்லை 

முடிந்த வரை அவளை 

முற்றிலும் படித்து முடி 

அது தான் வெற்றி

இலக்கணம் .... 

 

கவிதை பேசி உன்னை 

கவிழ்க்க முடியவில்லை 

அதனால் தான் மௌனம் 

பேசுகிறேன் சில நாட்களாய் .....

 

ஒரு முறையாவது 

திரும்பி பார் நான் சிலை 

என்று காக்கா எச்சம் இட்டு

செல்லும் முன்... 

 

உரைநடையில் பேசினாலும் 

உன் பற்களில் எழுதுகோல் 

கொண்டு உன் நாவில் 

கவிதை எழுதுவதாய்

உணர்கிறேன் ..  

 

senphysio1981@gmail.com