ஒரு பிடி மண்

மகா.தமிழ்ப பிரபாகரன்   

குண்டடிப்பட்ட கரங்களுடன்
குருதி கறையுடன்
ஒரு பிடி மண் !
தப்பி வந்த நடுநிசியில்
யாழ்ப்பாண மீன்பிடி தோணியில்
ஏறியவுடன் சட்டைப் பையில்
நிறப்பிக்கொண்டேன் தாய்மண்ணை.

சமுத்திரமே ஓய்ந்தாற் போல
அலைகள் சலனமின்றி
குண்டுகளின் ஓலமே
காதில் விழ
விடியற்பொழுதில் சிற்றோடம் கரைத்தட்டி
தமிழ்நாட்டில் சாய்ந்தது
அகதியெனும் பெயர் தாங்கி
தடுமாறி எழுந்தேன்...
குருதி வாடையே மீதமிருந்தது
சுமந்து வந்த
ஒரு பிடி தாய் மண்ணையும்
அலை பிடுங்கிக் கொண்டது.

 

 tamizheelan@gmail.com