இதயவலி; இலவச இணைப்பு

வித்யாசாகர 

காதல் மறுக்கப் பட்ட காதலியின்
கால்கொலுசு சப்தங்கள்;

இதயம் மரணத்தினால் துடிக்கும்
துடிப்பு;

துரோகத்தால் புடைக்கும்
நரம்பு;

பிரிவின் வலியின்
அழுத்தம்;

திருட்டு கொல்லைகளால் எழும்
பயம்;

குழந்தை கதறும் அலறலின்
கொடூரம்;

பெண் கற்பழிக்கப் படும்
காட்சிகள் மற்றும் கதைகள்;

கொட்டிக் கொடுக்கப் படும்
வட்டியின் வேதனை;

உறவுகளின்
சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும்
குடும்ப அரசியல்;

அலுவலக மேலதிகாரி
அரசியல்வாதி
காவல்துறை மற்றும் ரவுடிகளின் மிரட்டல்கள்;

சமுகம் சுற்றிக் கிடக்கும்
பொறுக்கமுடியா
அநீதிக் குப்பைகளென -

எல்லாமுமாய் சேர்ந்து கொடுத்தது
முப்பத்தைந்து நாற்பது வயதில் - ஒரு
பிரெசர் மாத்திரையும் -
இரண்டு வேலை உப்பில்லா சோறும்;
இதயவலி உடன் இலவச இணைப்பும்!!


 

vidhyasagar1976@gmail.com