காதல் - அன்று/இன்று

ராசை நேத்திரன்

மனித இடைவெளியின் 

தூரத்தில் தான் 

தினம்தோறும் கடந்து 

செல்கிறார்கள் இருவரும்... 

 

என்னுடைய வாழ்க்கையின் 

சரி பாதி நேரங்களை 

தினம்தோறும் நீ கொள்ளை 

அடிப்பதாய் சொல்ல 

துடிக்கும் மனதிற்கும்

மௌனதிற்க்குமான  

இடைவெளியில் காதலை 

சொல்லாமல் தினம் தோறும்

காதல் இளவரசர்கள்

அன்று ....

 

அன்றே பார்த்து  

அழகாய் சிரித்து

ஆசை மொழி பேசி 

அடுத்த நிமிடம் 

இருசக்கர வாகனத்தில் 

மார்பை மறைப்பதை 

தலை கவசமாக்கி அவசரமாய் 

ஹோட்டல் அறைக்குள் 

காதல் காமமாய் ...

இன்று... 



senphysio1981@gmail.com