நாளை
நேசிக்கிறேன்
ஈழவாணி
எதுவுமே
எண்ணத்
தோன்றாத
ஒரு
நிமிடத்தை
யாசிக்கிறேன்
உலக
சந்தடிகள்
தொலைந்த
காததூரத்தை
கண்ணுறத்
துடிக்கிறேன்
மரங்கள்
மட்டும்
வாழட்டும்
கொடிகளதில்
படர்ந்து
பாடட்டும்
காற்று
என்னோடு
பேசி
காதோடு
ரகஸ்யம்
சொல்லட்டும்
கனவுகள்
தொலைந்த
இரவுகளுக்காய்
காத்திருக்கிறேன்
கண்ட
காட்சிகளை
வெட்டிப்போட
ஒரு
பதுங்கு
குழியோடு
இன்னமும்
அழுதிராத
கண்கள்
காதல்
மட்டும்
பேசட்டும்
கானகங்களில்
எம்
மண்ணை
அதுண்ணும்
மரத்தை
விண்ணளாவ
விடாது
விடியலுக்கு
முன்பாய்
வெட்டியெறியும்
அக்
காடையனோடு
ஒருகாட்டையும்
நேசிக்கப்போகிறேன்
இக்காடு
அக்காடையனை
வன்புணர்ச்சியில்
சீரழித்து
சீழங்கள்
நாற
நாண்டு
வாழும்
நிலை
காணும்
நிமிடமதை
யோசித்து
நான்
நாளையை
நேசிக்கவிருக்கிறேன்.
eezhavani@gmail.com
|