காவக்கார தாத்தா

அன்பழகன

வடகாடும்
மேலக்காடும்
சுற்றியலைந்த
காவக்காரதாத்தா
சேவல்கட்டு
மரஉச்சாணிக்
கொப்பில்
பரணமைத்து
மதியவெயில்களைப்பு
தீர்த்தார்
மறைவில்
இருந்துகொண்டு
உற்சாகக்குரலில்
கூவியது குயில்
காவக்காரதாத்தா
வில் தெரிக்க
பொத்தென விழுந்து
துடிதுடித்தது
சிந்திய ரத்தம்
கரிசல்
நனைத்தது
மரம்நடுங்கியது
மற்றபட்சிகள்
பயந்தன
காற்று ஊளையிட்டது
சிறுகணத்தில்
எல்லாம்
இயல்பானது
காவக்காரதாத்தா போல்...



thamuanbalagan@gmail.com