சம்மதமில்லாத மவுனங்கள்

நாச்சியாதீவு பர்வீன்

எனக்கு பிடித்தமில்லாத
தெருக்களில்
எல்லாம்
உன்
பாதங்கள்
பதிகின்றன

உனக்கு மட்டுமே
நிலவு
காய்வதாயும்
பூக்கள்
பூப்பதாயும்
சூரியக்
கதிர்கள் பிறப்பெடுப்பதாயும்
நீ
நினைக்கின்றாய் 

உன் பாடுபொருள்களில்
இந்த
பிரபஞ்சம் முழுவது
பற்றியும்
பேசுகின்றாய்

எனது எண்ணங்களின்
வியாபிப்புகள்
பற்றியும்
எனதான
கனவுகள் பற்றியும்
அக்கறையற்ற
சடப்பொருலாகவே
உனது
நடத்தைகள்
என்வரையில்
இருக்கின்றது...

என் விழி இடுக்கில்
மைகளுக்குப் பின்னால்
மூடி
வைத்துள்ள
இரசனைக்
குறிப்புகள் பற்றிய
ஆலாபனை
உன்னிடம்
இல்லவே
இல்லை

என் மவுனங்களின் மீதேறி
நடை
பயிலும்
உனதான
பயணத்தின்
வேகம்
நமது புரிதலை
கேள்விக்
குறியாக்கி விட்டது

எனதான விட்டுக் கொடுப்புகளை
உன்
பிழையான மொழிபெயர்ப்புகள்
எத்தனை
நாட்கள்
என்
தூக்கத்தை  விழுங்கி
உள்ளது
 தெரியுமா?



armfarveen@gmail.com