எல்லாம்
மாறிப் போச்சு!
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
அத்தியவசியப்
பொருட்களுக்கெல்லாம்
விலை என்பது மலையாய் ஆச்சு!
போரு முடிந்து காலம் மாறியும்
சோறுக்கு கஷ்டமாச்சு!
கடலையின் விலைகேட்டு
குடலும்தான் நடுங்கிப்போச்சு..
சுடலைக்கு போகும் வரை
நிம்மதியே தொலைஞ்சு போச்சு!
ஏழையின் உழைப்புக்கு
மதிப்புகள் இல்லாமாச்சு..
சம்பளத்தை கூட்டிக்கேட்டதால்
வேலையும் பறிபோச்சு!
மனிதர்களின் கைகலப்பு
சாதிகளின் சண்டையாச்சு..
பலரும் அதில் கலந்ததாலே
நம்நாடு ரெண்டாய் போச்சு!
பென்னாடையும் பூமாலையும்
மேடைகளில் நிறைஞ்சு போச்சு..
ஆளுக்கு ஆள் மாலைபோடும்
காலம் இப்போ மலிஞ்சு போச்சு!
காணி கார் பங்களா
காசும் சீதனம் ஆயாச்சு..
கன்னியர் வாழ்வு அதனாலே
கானல் நீராய் போயாச்சு!!!
poetrimza@yahoo.com
|