எரியாதே என்னன்பே 2

செல்வி. ஸ்ரீ. பெருமாள் லுணுகலை-இலங்கை                                

1.
ஏகாந்தம் காவியே என்னையே எண்ணியே
  
வேகாதே வேல்விழியா ளே!

2.  கோழை இலைநீ குழந்தை இலை விழியால்
  
மாலைபுனை யாதேநீர்க் கோத்து.

3.  காலம் கனியும் கவலை கலைவாய் இவ்
  
ஓலமொரு நாள்போகும் ஓய்ந்து

4.  விம்மி வெடித்து வெறுப்பள்ளி வீசாதே
  
நம்பிக்கைக் கொள்ளடிநங் காய்.

5.  நாளையப் போழ்து நலம்பொழிய வேணுமடி
  
தாழையே கோபம் தவிர்.

6. முப்போதும் கண்ணீர் முகிழ்த்தி முடங்காது
 
இப்போதே நீவா எழுந்து

7. புறப்படு அன்பொடு இப்பொல்லாப் போரை
 
சிறைஇடுநீ என்செல்வ மே.

8. போராடு கண்மணீ இப்போர் விருட்சமது
 
வேரோடு வீழும்  வரை

9. கரியப்போர்க் கொன்று கருணை படர்த்தி
 
விரியச்செய் வெள்ளை உலகு

10.நிறுத்தடி நின்றன்நினைவினிலே ஈற்றாய்
  
இருக்கட்டும் என்றன் இறப்பு.                        

 

lunugalasri@yahoo.com